கோவை, செப். 22 –
கோவை மாவட்டம் கொடிசியா மைதானத்தில் நிறுவனர் வீர சீனு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் 2000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து சிஸ்கா அறக்கட்டளை சார்பில் கூறுகையில்: இந்த மாரத்தானின் நோக்கமானது ஏழ்மையான குடும்பத்தில் உள்ள படிக்க முடியாத மாணவ மாணவிகளுக்கு உதவும் வகையில் நடத்துகிறோம். இது எங்களுடைய மூன்றாவது மாரத்தான் ஆகும். இந்த மாரத்தானில் 5 முதல் 8, 10 கிலோமீட்டர் வரை கலந்து கொண்டு வலுவான சமுதாயத்தை உருவாக்கும் என்ற நோக்கத்தோடு இந்த அறக்கட்டளை பயணிக்கின்றது. இந்த மரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகையும், கேடயங்களும், விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டது.
இதில் ஜுவல் ஒன் எம் பி சீனிவாசன், ஏ ஒன் ட்ராவல்ஸ், டெகாத்லான், எஸ் கே எல் தாளாளர் கோவிந்தசாமி, சாம்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



