தென்தாமரை குளம், செப். 19 –
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட குலசேகர விநாயகர் திருமண மஹாலில் நேற்று தொடங்கி இன்று வரை இரண்டு நாட்கள் நடைபெற்றது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பொதுமக்கள் தங்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை ஒரே இடத்தில் பெறுவதற்கு ஏற்ற வகையில் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையும் வகையில் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட குலசேகர விநாயகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இரண்டாவது நாளாக இன்று நடந்த முகாமை விஜய் வசந்த் எம் பி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, பேரூராட்சி செயல் அலுவலர் பூதப்பாண்டி, வட்டார காங்கிரஸ் தலைவர் டேனியல், பேரூராட்சி தலைவர் விஜயகுமார், வர்த்த காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் கிங்ஸ்லி, மாவட்ட தலைவர் குணசேகர், கவுன்சிலர்கள் குறமகள், ஆதிலிங்கம், பிரபா மற்றும் உறுப்பினர்கள் பேராசிரியர் முருகேசன், வர்த்தக காங்கிரஸ் தலைவர் கிறிஸ்டோபர், கொட்டாரம் வர்த்தக காங்கிரஸ் தலைவர் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முகாமில் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் கந்தசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் தாஸ், குடும்ப அட்டை தனி வட்டாட்சியர் விஜயகுமாரி மற்றும் அரசு துறை அதிகாரிகள், வார்டு கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தி துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாற்று திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட 13 துறை அதிகாரிகள் பங்கேற்று மனுக்களை பெற்றனர். இந்த நகர் புறம் 13 துறைகளில் இருந்து 43 சேவைகள் பெறப்படுகின்றன.
இவற்றில் தகுதியானவர்களுக்கு மின் இணைப்பு, பெயர் மாற்றம், பட்டா, ஒ.பி.சி சான்றிதழ், ரேஷன் கார்டு பெயர் மாற்றம், நல வாரிய அட்டைகள் உள்ளிட்டவைகள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மீதமுள்ள கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணப்படும் எனவும், தகுதியான விண்ணப்பங்களுக்கு 45 தினங்களுக்குள் பதில் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



