சிவகங்கை, செப்டம்பர் 18 –
சிவகங்கை மாவட்டம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் – 2019 குறித்து இளம் நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் பொருட்டு 2025-2026 ஆம் ஆண்டுக்கான புத்தாக்கப் பயிற்சியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தலைமையில் நடைபெற்றது.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ். செல்வசுரபி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முனைவர் இரா. இராஜா, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் எஸ். குட்வின் சாலமன்ராஜ், உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் போ. விஜயகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் மு. நதர்ஷா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் வட்டாட்சியர் எஸ்.இ.எச். முபாரக் உசேன் உட்பட கலந்து கொண்டனர்.



