தஞ்சாவூர் ஜூன்.1
தஞ்சாவூரில் 90 ஆம் ஆண்டாகஒரே இடத்தில் 25 கருட சேவை வைபவங் கள் நடைபெற்றது…
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைத்துறை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் ஸ்ரீ ராமானுஜம் தரிசன சபா ஆகியவை சார்பில் 90 ஆம் ஆண்டாக நடைபெறும் திருவிழா நடந்தது
வெண்ணாற்றங்கரை ஸ்ரீ நரசிம்ம பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருநங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது
திவ்ய தேச பெருமாளுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு கீழ வீதி தெற்கு வீதி மேல வீதி வடக்கு வீதி ஆகியராஜ வீதிகளில் விதி உலா நடைபெற்றது .இதில் நீலமேகப் பெருமாள், நரசிம்ம பெருமாள், மணி குண்ட பெருமாள், வேலூர் வரதராஜ பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், யாதவ கண்ணன், கொண்டிராஜபாளை யம் யோக நரசிம்ம பெருமாள், கோதண்ட ராமர், கீழவீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள் உட்பட 25 கோவில்களில் இருந்து பெருமாள் ஏழுந்தருளி ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தனர்.
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.