திண்டுக்கல்
உலகப் புகழ் பெற்ற அருள்மிகு ஶ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் அமைந்துள்ள இந்த கோவிலில் பல சிறப்பு அம்சங்கள் கொண்டது மேலும் ஒரு சிறப்பு சுமார் 800 வருடம் பழமை வாய்ந்த அக்னி தீர்த்த கிணறு தற்போது திருக்கோயில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது . தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் நடைபெறும் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவிற்கும் மற்றும் திருக்கோயில் விஷேசங்களுக்கும், தேவையான தீர்த்தத்தை இந்த தீர்த்த கிணற்றில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று அறங்காவலர் குழு தலைவர் M.D. விக்னேஷ் பாலாஜி
அவர்கள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் , வாசு தேவன் , சுசீலா ராஜூ , .கேப்டன் பிரபாகரன் மற்றும் SRD.இராமானுஜம்
அவர்கள் முடிவு செய்துள்ளனர். இது சம்மந்தமாக தீர்த்தம் தேவைபடுபவர்கள் திருக்கோயிலுக்கு நேரில் வந்து அர்ச்சகர்களை தொடர்பு கொண்டு
தீர்த்தம்பெற்றுக் கொள்ளலாம் என்று திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் கூறியுள்ளார்.