ஈரோடு மே 18
தமிழ் நாட்டில் நடைபெற்ற 10 ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மாநில அளவிலான ஒட்டு மொத்த பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 96 சதவீதம் தேர்ச்சி பெற்று பதினொன்றாம் இடம் பெற்றுள்ளது. மாநில அளவிலான அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 94.15 சதவீதம் தேர்ச்சி பெற்று பதினொன்றாம் இடம் பெற்றுள்ளது.
10 ம் வகுப்பு தேர்வு எழுதிய 12065 மாணவியர்களில் 11769 மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12081 மாணவர்கள் தேர்வெழுதியதில் 11412 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் கடந்த 2023– 2024ஆம் கல்வியாண்டில் பெற்ற தேர்ச்சி சதவீதம் 95.08 சதவீதம் .2024– 2025 ம் கல்வியாண்டில் பெற்ற தேர்ச்சி சதவீதம் 96 சதவீதம் .கடந்த ஆண்டினை ஒப்பிடும் போது இந்த ஆண்டு கூடுதலாக 0.92 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 168 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன. அதில் 66 அரசுப் பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சியையும் பெற்றுள்ளன. 1054 மாணவர்கள் பாடங்களில் முழு மதிப்பெண்கள் (100) பெற்றுள்ளனர்.


