ஈரோடு, அக் : 14
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டக் கழகத் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் விஜய் மனோகரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், காலமுறை ஊதியம் வழங்குதல், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்தல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஒப்பந்த நியமன முறையை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வரும் 28-ம் தேதி தாலுகா அலுவலகங்கள் முன்பு தர்ணா, நவம்பர் 18-ம் தேதி பிரசார இயக்கம், டிசம்பர் 4-ம் தேதி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களைத் திரட்டி முதல்வரிடம் பெருந்திரள் முறையீடு நடத்தப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.



