நாகர்கோயில் – அக் – 28,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து குமரி வீல் செயர் அறக்கட்டளை சார்பில் ஐந்தாம் ஆண்டு விழா மற்றும் தீபாவளி விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை பூத் டக்கர் நினைவு திருச்சபை வெட்டூர்ணிமடம் மேஜர் சந்திரகாசன் ஜெபம் செய்து துவங்கி வைத்தார். சுதா வசந்தகுமார் முன்னிலை வைகித்தார். சிறப்பு விருந்தினராக நாகர்கோயில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் கலந்து கொண்டு மாற்றுதிறனாளிகள், சமூதாயத்தில் நலிவடைந்தோர், மற்றும் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சின்னதுரை மற்றும் மைக்கேல் ஜெரால்ட், ஹீல் தொண்டு நிறுவனம் சிலுவை வஸ்தியான், லதா கலைவாணன்,உதவும் கரங்கள் அறக்கட்டளை சுரேஷ், ஜேக்கப் பாராமெடிக்கல் டாக்டர் ரவி, பிரிட்டோ,அன்னை நகர் ஊர் தலைவர் ஆன்ஸ்லம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். மேலும் பணகுடி 3-ம் நிலை நூலகர் ஆரோக்கிய ராஜேஷ், சன் பிளவர் சுய உதவி குழுக்கள் குமார், ஜி வி எஸ் உதவும் கரங்கள் அறக்கட்டளை சுரேஷ், கலைமாமணி பழனியாபிள்ளை, இரத்த கொடையாளர் செல்வகுமார் ஆகியோருக்கு குமரி சாதனையாளர்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் குமரி வீல் செயர் அறக்கட்டளை ஆலோசகர் வசந்தகுமார் விளக்கவுரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மாற்றுதிறனாளிகள் சுயதொழில் புரிய ஆலோசனைகள் மற்றும் பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இறுதியாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பழனி கணபதி சார்பில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.