மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பழங்காநத்தம்
பசும்பொன் நகர்
பகுதியில் அருள்பாளித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் 55 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இவ்விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக சுமார் 500 க்கும் மேற்பட்ட பால் குடங்கள் இதனுடன் ராட்சத பறவை காவடிகள் உட்பட 300 க்கும் மேற்பட்ட தீச்சட்டிகள் எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்தினர்.
இத்திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணியபுரம் காவல் நிலைய போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



