சங்கரன்கோவிலில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு டி டி டி ஏ சிறப்பு பள்ளிகுழந்தைகளுக்கு
மதிய உணவு எம் எல் ஏ ராஜா துவக்கி வைத்து உணவு கூடத்திற்கு 5 மின்விசிறிகள் வழங்கினார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தொமுச சார்பில் சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் உள்ள டி டி ஏ சிறப்பு குழந்தைகள் பள்ளியில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன் தலைமை வகித்தார். சேகர குரு கிங்ஸ்லி ஜெபக்குமார், வாட்சன் வரதராஜன் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்பு குழந்தைகளுக்கு மதிய உணவினை வழங்கி துவக்கி வைத்தார். இதில் தொமுச மாவட்ட திட்ட தலைவர் ஜெயராமன், திட்டச் செயலாளர் மகாராஜன், திமுக மாவட்ட பொருளாளர் சரவணன், நகர செயலாளர் பிரகாஷ் , ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், பெரியதுரை வெள்ளத்துரை ராமச்சந்திரன் பால் ராஜ் தொமுச சங்கரன்கோவில் பணிமனை கிளை செயலாளர் சங்கர் ராஜ் கோட்டச் செயலாளர் சரவண முருகையா அமைப்பு சாரா அணி ஜெயராமன் துணை செயலாளர் குருசாமி ராஜ் வேலு ஈஸ்வரன் மாடசாமி முத்தையா முருகானந்தம் ஜான் கிறிஸ்டோபர் செந்தில் வீரக்குமார் மாரிச்சாமி வெள்ளைச்சாமி கனகசெல்வம் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார் உள்பட திமுக சார்பு அணி மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு குழந்தைகளுக்கு பள்ளியில் மதிய உணவு வழங்க வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ சென்றபோது உணவு சாப்பிடும் கூடத்தில் மின்விசிறி இல்லாமல் சிரமப்படுவதாக குழந்தைகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக 5 மின்விசிறிகள் வாங்கி அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். உடனடி நடவடிக்கை எடுத்த ராஜா எம்எல்ஏவுக்கு குழந்தைகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.