திமுக இளைஞரணி தலைவரும் தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழாவை திமுகவினர் தமிழக முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மத்திய மாவட்ட திமுகவில் 48 வது பகுதி செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில் சேலம் வின்சென்ட் பகுதியில் கட்சி கொடியினை ஏற்றி வைத்த அவர் பின்னர் ஏழை எளியவர்களுக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் 14வது வார்டு செயலாளர் செந்தில்குமார் அடிப்படை கட்சி நிர்வாகிகள் செந்தில்நாதன் விஜயகுமார் அயல்நாட்டு அணி பகுதி அமைப்பாளர் சாகுல் ஹமீது பன்னீர்செல்வன் பாலமுருகன் சாந்தி தஸ்தகீர் சலீம் பிரபு அருள் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.