திருப்பத்தூர்:பிப்:11, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விசமங்கலத்தில் செயல்பட்டு வரும் செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 45 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிறுவனர் C.S.ராஜா தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் C.S.R.கௌதம் அனைவரையும் வரவேற்று பேசினார். செயலாளரும், கவுன்சிலருமான C.S.R.வினோத் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி,
சென்னை பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் பி.பாலசுப்பிரமணியன், திருப்பத்தூர் பொது மருத்துவர் பிரபு, உதவி காவல் ஆய்வாளர் ரூபி, சன் டிவி சின்னத்திரை புகழ் எதிர் நீச்சல் நந்தினி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
சிறப்பு அழைப்பாளர் உதவிப் பேராசிரியர் பேராசிரியர் பேசுகையில்: இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பாதுகாப்பான முறையில் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.திறன் மிக்க மாணவ மாணவிகளாகவும், நல்ல சிந்தனை மிக்கவர்களாக உள்ளனர். படிப்பை மட்டும் வைத்து பிள்ளைகளை தரம் பிரிக்காமல் மாணவ மாணவிகளின் நல்ல திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும். இந்த பள்ளியினைப் பொறுத்த வரை மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருகின்றனர் என்று வாழ்த்தி பேசினார்.
மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள், நினைவு கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக பள்ளியின் ஆண்டறிக்கையினை ரேவதி கௌதம் வாசித்தார். நிகழ்வின் இறுதியில் மாணவி நன்றியுரை வழங்கினார்.