மதுரை பிப்ரவரி 28,
மதுரை மாவட்டத்தில் சிற்றுந்துகள் இயக்குவதற்காக முதற்கட்டமாக 41 வழித்தடங்கள் கண்டறியப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் பெற
மதுரை மாவட்ட அரசிதழில் கடந்த 10.02.2025-ல் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அரசாணை எண்.33, உள் (போக்குவரத்து-I) துறை, நாள்.24.01.2025-ன்படி, தமிழக அரசால் ‘புதிய விரிவான திட்டம் 2024’ (சிற்றுந்து) ஏற்படுத்தப்பட்டு,
அதனைத் தொடர்ந்து 24.02.2025 வரை மதுரை மாவட்டத்தில் மேற்படி திட்டத்தின்கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மதுரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (25.02.2025) மாவட்ட ஆட்சியர் தலைமையில், இணைப் போக்குவரத்து ஆணையர், மதுரை சரகம், மாவட்ட வருவாய் அலுவலர், கூடுதல் ஆட்சியர்(பயிற்சி), கோட்ட மேலாளர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மதுரை(தெற்கு) மற்றும் மதுரை(வடக்கு) ஆகியோர் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 18 வழித்தடங்களுக்கு 30 விண்ணப்பத்தாரர்களுக்கு சிற்றுந்து (Mini Bus) அனுமதி சீட்டிற்கான செயல்முறை ஆணைகள் வழங்கப்பட்டன.