நீலகிரி. டிசம்.04.
பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக அதி கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக ஊட்டி நொண்டிமேடு பகுதியில் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஆறுமுகம் என்பவர் உயிரிழந்தார். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சரும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சாமிநாதன் நேற்று மாலை ஊட்டி வந்தார் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தொழிலாளி ஆறுமுகத்தின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஆறுமுகத்தின் குடும்பத்திற்கு 4. வட்சம் நிவாரண நிதியை வழங்கி அமைச்சர் ஆறுதல் தெரவித்தார். பின்னர் அமைச்சர் மூ.பெ. சாமிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக உடனடியாக நீலகிரியில் இருக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறித்தியதின் அடிப்படையில் ஊட்டிக்கு வந்தபின் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
வீடு இடிந்து நிலச்சரிவில் சிக்கி பலியான குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பின் தமிழக முதல்வர் உத்தரவின்படி குடும்பத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் நிதியை வழங்கி ஆறுதல் கூறினார