சிவகங்கை: மார்ச்:01
சிவகங்கை மாவட்டம் ஈசனூர் ஸ்ரீ செருவலிங்க அய்யனார் கோவில் 3ம் ஆண்டு களரி படைப்பு திருவிழா நடைபெற்றது. இத்திருவிழா வருட வருடம் மாசி 17ஆம் தேதி 3 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.இந்த திருவிழாவில் சிவகங்கை , மதுரை, ராமநாதபுரம், மயிலாடுதுறை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சாமி கும்பிடும் பங்காளிகள் மற்றும் பக்தர்கள் அழகு குத்தி ,பால்குடம் எடுத்து ,கிடாய் வெட்டி , நேர்த்திக்கடனை செலுத்தினர். ஈசனூர் ஈசானி அம்மன் ஆதிசெல்வம் வகையறா மற்றும் ஈசனூர் கிராம பொதுமக்கள் திருவிழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தனர். ஸ்ரீ செருவலிங்க அய்யனார் கோவில் பங்காளிகள் அனைவரும் தனித்தனியாக பக்தர்களுக்கு 3 நாட்களும் அன்னதானம் வழங்கப்படும் என தெரிவித்தார்.