மதுரை மே 23
மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் நேஷனல் புக் டிரஸ்ட், மதுரை மாவட்ட நூலக ஆணைக்குழு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் இணைந்து நடத்திய 39 வது தேசிய புத்தகக் கண்காட்சி.
இந்த விழாவில் மதுரை கிளை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமித்துரை தலைமையேற்று கண்காட்சியைத் துவக்கி வைத்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ஷேக் நபி வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் இம்ரான்கான் விற்பனையின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் மதுரை ரோல்டன் பொருளாளர் அன்பரசு மற்றும் காமராஜர் பல்கலைக்கழகம் உதவிப் பேராசிரியர் கருப்பத்தேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த நிகழ்வின் போது
உதவித் தலைமையாசிரியர் ரகமத்துல்லா, கவிஞர் செல்லா, மீனாட்சிசுந்தரம், ஆசிரியர்கள் அல்ஹாஜ் முகமது, ஷெரீப் அலி, சிவசத்யா, சித்ராதேவி, தமிழ் ஆர்வலர் ஆதித்தா மற்றும் புதூர் வாழ் வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
22-05-2025 முதல் 01-06-2025 தேதி வரை நடைபெறுகின்ற இப்புத்தகக் கண்காட்சியில் ஏராளமான புத்தகங்கள் விற்பனைக்கும், பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளது. புத்தக கண்காட்சிக்கான ஏற்பாடுகளை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் பொறுப்பாளர்கள். கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன், தனசேகரன், ராமர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.