நாகர்கோவில் ஆக 9
குமரி மாவட்டத்தை சேர்ந்த இந்து முன்னணி இளைஞர் அமைப்பை சார்ந்தவர் பாலன் இவர் 1982 ஆம் ஆண்டு சென்னை தலைமை ஆர் எஸ் எஸ் காரியாலத்தில் பயங்கரவாதிகளால் வெடிகுண்டு வீசப்பட்டதில் குமரிபாலன் உயிரிழந்தார் அதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அவருடைய நினைவு நாளை இந்து முன்னணியினர், ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் அனுசரித்து வருகின்றனர்,அந்த வகையில் அவரது 31-வது நினைவு நாளை முன்னிட்டு குமரி மாவட்ட இந்து முன்னணி சாா்பில், நாகா்கோவில் நாகராஜா கோயில் திடலில் இருந்து இருசக்கர வாகன பேரணி நடைப்பெற்றது.இப்
பேரணியை குமரி மாவட்ட பாஜக பொருளாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவருமான முத்துராமன் தலைமையேற்று பேரணியை கொடியை சேர்த்து துவங்கி வைத்தார்.இப்பேரணியானது நாகர்கோவில், பாா்வதிபுரம் வழியாக தக்கலை பிரம்மபுரத்திரத்தில் உள்ள பாலன் நினைவு இடத்திற்கு சென்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் இந்து முன்னணியினர், ஆர்எஸ்எஸ், பாஜக என நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.