தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில்
வீரமங்கை வேலுநாச்சியாரின் 295-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மகளிர் அணி சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு தருமபுரி மாவட்ட தலைவர் தாபா சிவா தலைமை தாங்கினார்.
இளைஞர் அணி தலைவர் விஜயகாந்த், மாவட்ட மகளிர் அணிதலைவி சத்யா, விரமணி
முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் செல்வி ,கிருத்திகா , பாரதி ,ஜெயரணி ,தனலட்சுமி ,திலகா ,ரம்யா ,சசிகலா ,லதா மற்றும் ஐந்து சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட அணியின் தலைவர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய ,நகர ,பேரூராட்சி, கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.