ஈரோடு பிப் 23
ஈரோடு வ.உ.சி விளையாட்டு அரங்கில் விளையாட்டு போட்டிகளுடன் கூடிய கலைத்திருவிழாவில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவ மாணவியர் விடுதிகளில் தங்கிப் பயின்று வரும் 4 ம் வகுப்பு முதல் கல்லூரி வரையிலான சுமார் 220 மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் சக்திவேல், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் பதக்கங்கள் வழங்கினார்கள்.
மேலும் இந்த விளையாட்டுப் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை மொடக்குறிச்சி அரசு கல்லூரி மாணவிகள் விடுதியினரும், அவல்பூந்துறை பள்ளி மாணவியர் விடுதியினரும் பெற்றனர்.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் மொடக்குறிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த உடற்கல்வி, தமிழ்த்துறை மற்றும் வணிகவியல் துறை பேராசிரியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.