திருப்பத்தூர்:ஜூலை:20,
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வாயிலாக சிறிய அளவில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்புடன் நேர்முக வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டு 21 இளைஞர்களுக்கு அந்நிறுவனங்களில் பணிபுரிவதற்கான ஆனைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் வழங்கினார். உடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்
ம.கௌரிசங்கர் (பொ) மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.