கோவை, ஏப். 20 –
கோவை போத்தனூர் கிறிஸ்துவ திருச்சபையின் ஒன்றிணைப்பு இயக்கம் சார்பாக வர இருக்கும் 2026 தேர்தலை முன்னிட்டு வெள்ளலூர் சாலையில் உள்ள சிஎஸ்ஐ ஐக்கிய ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 2026 தேர்தல் களம் சிறப்பாக அமையவும் நல்லாட்சி மலரவும், உலக நாடுகளுக்கிடையே நல்லுறவு நிலவும் மக்களிடையே சமத்துவத்துவமும் சமாதானத்துவமும் ஏற்பட இப்பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தை தலைமை உரையாக தலைவர் ஆர்இவி.எஃப் ஆர் ஆனந்தகுமார், செயலாளர் ஆர்இவி.எஃப்ஆர் ரசல்ராஜ், பொருளாளர் ஆர் இ வி.எஃப் ஆர் கெர்சோம் ஜேக்கப் ஆகியோரது முன்னிலையில் அனைத்து திருச்சபையில் மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தவர் சிறுபான்மை பிரிவு சத்யராஜ் ஜவகர் என்பது குறிப்பிடத்தக்கது.



