நாகர்கோவில் – நவ – 03,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
இதனால் தெரு வீதிகள் பட்டாசு கழிவுகள் அதிக அளவில் குவிந்தன அந்த கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் துரித பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 20 டன் அளவிற்க்கு பட்டாசு கழிவுகள் வலம்புரி விளை குப்பை கிடங்கில் கொண்டு வரப்பட்டுள்ளது. பட்டாசு கழிவுகளை நேரடியாக குப்பை கிடங்கில் கொண்டு கொட்டினால் வெயில் நேரங்களில் வெடிக்காத பட்டாசுகள் அதிக வெயிலின் காரணமாக வெடித்து தீ விபத்து ஏற்ப்பட நேரிடும் என்பதை கருத்தில் கொண்டு குப்பை கிடங்கிற்க்கு கொண்டு வரப்படும் பட்டாசு கழிவுககளை தனியாக ஒரு இடத்தில் கொட்டி அதன் மீது தண்ணீர் விட்டு நன்றாக குளிர வைத்த பிறகே குப்பை கிடங்கில் போடும் ஏற்ப்பாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
வலம்புரி குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்ட பட்டாசு கழிவுகள் வெயிலினால் தீப்பிடிக்காத வகையில் அதன் மீது தண்ணீர் ஊற்றி முறையாக கையாளப்படுகின்றதா என்பதை மேயர் மகேஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார்.
உடன் மாநகராட்சி சுகாதார அலுவலர் பகவதி பெருமாள் மற்றும் பலர் இருந்தனர்.