திருவாரூர்
மார்ச் 4
திருவாரூர் வட்டம், புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், நேரில் பார்வையிட்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 03 ஆம் தேதி முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 5986 மாணவர்களும், 7420 மாணவிகளும் என மொத்தம் 13406 மாணவ, மாணவிகள் 57 தேர்வு மையங்களில் எழுத விண்ணப்பித்ததில் 5766 மாணவர்களும், 7291 மாணவிகளும் மொத்தம் 13057 (137 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் உட்பட) மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வுப்பணிக்கு ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் போதுமான அளவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இத்தேர்வு கண்காணிப்பு பணியில் 75 நிலையான கண்காணிப்பு குழுக்களும், 5 பறக்கும் படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வுகளில் எவ்வித முறைகேடும் நடைபெறாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் சௌந்தர்ராஜன், வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.