மதுரை மாவட்டம் யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக_189_ ஆவது வார மரக்கன்றுகள் நடும் விழா ஒத்தக்கடை பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் வர்ஷா கார்டனில் நடைபெற்றது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் தலைமையாசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் ராகேஷ் முன்னிலை வகித்தார். ஆலோசகர் பிரபு வரவேற்றார். உறுப்பினர் பரமேஸ்வரன் தொகுத்து வழங்கினார். குழந்தை நலினா அப்துல் கலாம் பொன்மொழிகள் கூறி நிகழ்வை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக ரேடியோ சிட்டி ரேடியோ ஜாக்கி நாகா கலந்து கொண்டார். யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக நாகா அவர்களுக்கு காற்றின் மொழி ஆளுமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மரங்களின் பயன்பாடுகள், சுற்றுச்சூழல், திடீரென ஒரே இடத்தில் மொத்தமாக கொட்டும் மழை, உயரும் வெப்பநிலை ஆகியன குறித்து நாகா சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்விற்கு தேவையான வேம்பு, புங்கை மரங்கள் மற்றும் வலைகளை சிலம்பம் மாஸ்டர் பாண்டி வழங்கினார். விழாவில் வனத்துறையை சேர்ந்த சிவக்குமார், பசுமை சாம்பியன் அசோக்குமார், பாலமுருகன், வர்ஷா கார்டன் நிர்வாகிகள், பணியாளர்கள், சமூக ஆர்வலர் பாஸ்கரன், செல்வி, ஸ்டெல்லா மேரி ஆகியோர் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளால் மரங்கள் நடப்பட்டது. நிகழ்வில் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மரங்கள் நட்டனர். மாணவி நிலா ஸ்ரீ நன்றி கூறினார்.
189 வது மரக்கன்றுகள் நடும் விழா

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics