ஆக.13
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கள் துறையின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ரூ.9.86 கோடி மதிப்பீட்டில் 18 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். திருப்பூர் மாநகராட்சி இடுவம்பாளையம் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். செல்வராஜ் எம்.எல்.ஏ,மேயர் தினேஷ்குமார் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கள் துறையின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் பள்ளிமேம்பாட்டு நிதியின் கீழ் ஆத்துபாளையம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும்,இபி காலனி சாமுண்டிபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும்,சோளிபாளையம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும்,காவிலிபாளையம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும்,பாண்டியன் நகர் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும்இ அண்ணா நகர் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும், நேரு நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும்,நெசவாளர் காலனி மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும் திறந்து வைத்தார்.
இதுபோல் டி.என்.கே.புரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும்,விஜாயபுரம் எஸ்.எஸ்.ஏ மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும்,பழைய நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும்,குப்பாண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும்,சந்திராபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும்,இடுவம்பாளையம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரூ.35இலட்சம் மதிப்பீட்டில் ஆகிய 14 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடப்பணிகளை திறந்தார்.
மேலும்இ 15-வேலம்பாளையத்தில் ஜப்பான் பன்னாட்டு நிறுவனம் கூட்டுறவு முகமை நிதியின் கீழ் ரூ.1.20 கோடியில் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதர மையம் கட்டடம் உள்பட மொத்தம் ரூ.9.86 கோடி மதிப்பீட்டில் 18 முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம்இ திருப்பூர் மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் இல.பத்மநாபன் (4-ம் மண்டலம்),கோவிந்தசாமி (3-ம் மண்டலம்),கோவிந்தராஜ் (2-ம் மண்டலம்),உமா மகேஸ்வரி (1-ம் மண்டலம்)இ தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், துணை ஆணையர்கள் சுல்தானா,சுந்தர்ராஜ், உதவி ஆணையர் வினோத்இ செயற்பொறியாளர் செல்வநாயகம்,மாநகர நலஅலுவலர் கௌரி சங்கர் மற்றும் கவுன்சிலர்கள் சுபத்ராதேவி,கவிதாநேதாஜிகண்ணன்,சாந்தாமணி,திவாகரன்,மணிமேகலை,சாந்தாமணி மற்றும் பகுதி செயலாளர்கள் முருகசாமி, போலார் சம்பத்,மு.க.உசேன்,மின்னல் நாகராஜ் மற்றும் அவைத்தலைவர் நடராஜன்,மாநில பிரசார குழு செயலாளர் உமா மகேஸ்வரி,மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கலைச்செல்வி வட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.