அரியலூர்,ஆக:04
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் நல்லநாயகபுரம் கிராமத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் மாரியம்மன் சாமிக்கு 16-ஆம் ஆண்டு பால்குடம் திருவிழாவை முன்னிட்டு 27-7-24 சனி கிழமை மாலை அணிந்து ஏழு நாட்கள் விரதமிருந்து மாரியம்மன் சாமியை வழிபட்டு வந்தனர். 31-07-2024 விளக்கு பூஜை நடைபெறுகிறது. விளக்கு பூஜையில் மாலை அணிந்த பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். 2-8-2024 ஆடி 3 ம் வெள்ளிகிழமை முக்கிய நிகழ்வாக பால்குடம் திருவிழா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பக்த கோடிகள் அனைவரும் நல்லநாயகபுரம் குழுமூர் இடையே இருக்கும் வேளானி கரையில் இருந்து பம்பை மேளத்துடன் சக்தி அழைத்துக்கொண்டு பக்த கோடிகள் பால்குடம் எடுத்து ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாரியம்மன் மற்றும் செல்லியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பாலால் அபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சி அம்மனுக்கு கூழ் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாலபிஷேகம் செய்யப்பட்ட பால் மற்றும் கூழ் ஆகியவை பக்தர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது பொதுமக்கள் பக்த கோடிகளுக்கு லெமன் ஜூஸ். ரஸ்னா மற்றும் குளிர்பானங்கள் கொடுத்தனர். 2-8-2024 இரவு மாரியம்மன் மலர்களால் அலங்கரித்து திருவீதி உலா வர உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் டாக்டர் அப்துல்கலாம் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செயல்பட்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்