நாகர்கோவில் செப் 13
குமரி மாவட்டத்தில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல், உரிய ஆவணங்கள் இன்றி, பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டிருந்தார். அவரின் உத்தரவைத் தொடர்ந்து கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் தினந்தோறும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் சாலையில் வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி தனது மேற்பார்வையில் போக்குவரத்து ஆய்வாளர் பிரபு , போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமையில் அஞ்சுகிராமம் பகுதியில் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டி வரப்பட்ட 12 நான்கு சக்கர வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த வாகனங்களை பறிமுதல் செய்து ரூ. 1,11500 (ஒரு இலட்சம் பதினொன்று ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் ) அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.