மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சி மற்றும் அலங்காநல்லூர் பேரூராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மேலூர் நகராட்சியில் கட்டப்பட்டுள்ள கர்னல் பென்னிகுவிக் பேருந்து நிலையம், வார்டு எண் 23, அம்மன் நகரில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகம். சிவன் கோவில் தெருவில் கட்டப்பட்டுள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி கட்டடம் அலங்காநல்லூர் தேர்வு நிலை பேரூராட்சியில் டாக்டர். அம்பேத்கார் பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகள் மற்றும் வணிக வளாகம் என மொத்தம் திட்ட பணிகளை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். தொடர்ந்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் பொது மக்கள் நலனுக்காக நகராட்சி நிர்வாகத் துறையின் மூலம் பல்வேறு அடிப்படை வசதிகளை செயல்படுத்தி வருகிறார்கள், தமிழ்நாட்டில் மொத்தம் 25 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் தேவைக்கேற்ப நகர பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால், தெரு விளக்கு திடக்கழிவு மேலாண்மை போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் மேலூர் நகராட்சியில் ரூ.10.45 கோடி மதிப்பீட்டில் கர்னல் பென்னி குவிக் பேருந்து நிலையம் புதிய அறிவுசார் மையம், நகராட்சி தொடக்கப்பள்ளி கட்டடம் ஆகியவை இன்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அதே போல அலங்காநல்லூர் தேர்வு நிலை பேரூராட்சியில் ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் டாக்டர் அம்பேத்கர் பேருந்து நிலையம் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வணிக வளாகங்களும் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலூர் நகராட்சியில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் ரூ.54.56 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில், மதுரை மாவட்டம் அரிட்டப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தனித் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். மேலும் தாம் முதலமைச்சராக பொறுப்பு வகிக்கும் வரையில் தமிழகத்தில் ஒருபோதும் டங்ஸ்டன் திட்டம் வராது டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்கும் நிலை வந்தால் நான் முதல்வராக இருக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசினார் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா சௌ. சங்கீதா, பேரூராட்சிகள் துறை இயக்குநர் கிரண் குராலா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மதுரை மாறகராட்சி ஆணையாளர் சி.தினேஷ்குமார். மேலூர் நகர் மன்றத் தலைவர் உமுகமது பாசின், அலங்காநல்லூர் பேரூராட்சித தலைவர் ரேணுகா ஈஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



