அரியலூர், மே:24
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த முள்ளுக்குறிச்சி கிராமத்தில் மின்சாரம் தாக்கியதில் 11 குரங்குகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த முள்ளுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மகன் செந்தில்குமார் விவசாயியான இவர் வீட்டிலிருந்து அவரது மற்றொரு கொட்டகைக்கு செல்லும் மின்சார ஒயரில் பாதிப்பு ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக அருகில் இருந்த கம்பிவேலியில் மின்சாரம் பாய்ந்தது இதில் அந்தப் பகுதியில் சுற்றி திரிந்த 11 குரங்குகள் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தன
இந்நிகழ்வு தொடர்பாக உடனடியாக மின்சார வாரியத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின் துறை தொழிலாளர்கள் அந்தப் பகுதியில் சேதம் அடைந்த ஒயர் முற்றிலும் அகற்றினர். தொடர்ந்து மின் ஊழியர்கள் வீட்டில் உரிமையாளரிடம் மின் சாதனங்களை மாதத்திற்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை மாற்றி கையாளுமாறு வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து தளவாய் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை புரிந்து குரங்குகள் இறந்த இடத்தினை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் உரிமையாளரிடம்
வனத்துறையினர் வன குரங்குகள் இறப்பு குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
குரங்குகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.