சுசீந்திரம்.செப் 13
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த 11 உண்டியல்களையும் நேற்று காலை கோவில்களின் இணை ஆணையர் பழனி குமார், இந்து சமய அறநிலை துறை அறங்காவல் குழு தலைவர் பிரபா ஸ்ரீ ராமகிருஷ்ணன், அறங்காவல் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் திறந்து கோவில் ஊழியர்கள் எண்ணினர். இதில்
மொத்தம் ரூபாய் 1081063 /- தங்கம் 5.200 கிராம் மற்றும் வெள்ளியினம் 8 கிராம், வெளிநாடு கரன்சி மலேசியா ரிங்கிட் 299, சவுதி அரேபியா ரியால்47 ஆகியவை கிடைத்தது.