சங்கரன்கோவில். அக்.10.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து தியாகி இம்மானுவேல் சேகரன் நூறாவது பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவை தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, யூஎஸ்டி சீனிவாசன் ,பரமகுரு மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் முன்னிலை வகித்தனர். இதில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, வாசுதேவநல்லூர் எம்எல்ஏ டாக்டர் சதன் திருமலை குமார் ஆகியோர் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜதுரை, மாவட்ட பொருளாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன், கடற்கரை ,கிறிஸ்டோபர், வெள்ளத்துரை, நகரச் செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி ,நகர அவைத் தலைவர் முப்பிடாதி ,நகரத் துணைச் செயலாளர் சுப்புத்தாய் ,தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன் ,மின்வாரிய தொமுச திட்ட செயலாளர் மகாராஜன், மாணவரணி உதயகுமார், தொண்டரணி அப்பாஸ் அலி ,தொமுச சங்கர் ராஜ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜராஜன், மற்றும் ஜலால், ஜெயக்குமார், கார்த்தி, நகராட்சி கவுன்சிலர் ஷேக் முகம்மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.