தஞ்சாவூர் ஆகஸ்ட் 11.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்த தமிழ் புதல்வன் திட்டத்தில் 9057 மாண வர்கள் ரூ1000 கல்வி உதவி வழங்க ப்படுகிறது,என்றார் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம்.
கோவை மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தை தமிழக முதல் வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத் து, நிகழ்வை தஞ்சாவூர் பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரியில் மாணவ மாணவியரு க்கு காணொளி காட்சி மூலமாக ஒளிபரப்பப்பட்டது.
இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியதாவது:
கல்லூரிகளில் சேர்ந்து தொடர்ந்த துபடிக்க வேண்டும் என்பதற்காக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவ மாணவிக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தில் ,தஞ்சாவூர் மாவட்டத்தில் 112 கல்லூரியில் பயிலும் 12,037 மாணவிகள் பயன டைகின்றனர்.
இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூபாய் 1,000ஆயிரம் வழங் கும் தமிழ் புதல்வன் திட்டத்தை தமிழக முதல்வர் உருவாக்கி உள்ளார் . இந்த திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 85 உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் 9 ஆயிரத்து 57 மாணவர்கள் பயனடைகின்றனர்.என்றார் மாவட்ட ஆட்சியத் தலைவர்
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய இணை இயக்கு னர் சுந்தரி, மாவட்ட கல்லூரி கல்வி இணை இயக்குனர் ரோசி, மேயர் சண்.ராமநாதன், மேயர் துணை மேயர் அஞ்சுக்கும் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணி ய மூர்த்தி, பாரத் கல்வி குழுமச் செயலர் புனிதாகணேசன், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) அனு சுயா, முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்



