வேலூர், செப் :25
எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூர் கோஆப் டெக்ஸில் பட்டு மற்றும் பருத்தி போன்ற கைத்தறி ரக பொருட்களின் விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, கைத்தறி துணிகளை பார்வையிட்டார். இந்நிகழ்வில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் .ப.கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், 2 மண்டலக்குழுத்தலைவர் .ஆர்.நரேந்திரன், கைத்தறி உதவி இயக்குநர் .அன்பரசு, மாமன்ற உறுப்பினர் .முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் .தயாளன், கோஆப் டெக்ஸ் மண்டல மேலாளர் ரத்னா, மேலாளர் .சந்துரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.



