கிருஷ்ணகிரி, ஜுலை 14 –
அதிமுக கழக துணைப் பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. முனுசாமி எம்எல்ஏ வேப்பனப்பள்ளி சட்டமன்ற
தொகுதிக்குட்பட்ட இஸ்லாமிய பெருமக்களின் கோரிக்கை கேட்டறிந்து அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். இஸ்லாமிய மக்கள் ஒரு சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அதைக் கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
மேலும் அப்பகுதியில் உள்ள குறைகளை கேட்டு அறிந்து சிறிது நேரம் உரையாடினார். அப்போது இஸ்லாமிய மக்கள் எங்களுடைய ஆதரவு என்றும் எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறினர். நிகழ்ச்சியில் வேப்பனப்பள்ளி அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் ஒன்றிய பொறுப்பாளருமான கலில் மற்றும் இஸ்லாமிய பொதுமக்கள் உடன் இருந்தனர்.