பூதப்பாண்டி, ஜுன் 30 –
பூதப்பாண்டியை அடுத்துள்ள அருமநல்லூர் அம்பட்டையான் கோணம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜன் (54). இவர் அடிக்கடி குடித்துவிட்டு வருவதாகவும் வீட்டிற்கு சரியாக பணம் கொடுக்காததால் கணவன் மனைவிக்குள் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏதோ விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி தேவகி (53) பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து தேவகி கொடுத்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.