களியக்காவிளை, அக். 21 –
விவசாயியின் தோட்டத்தில் புகுந்து வாழை மரங்களை வெட்டி சாய்த்து தென்னை மரங்களில் இருந்து இளநீர் குலைகளை அடர்த்தி குடித்து சூறையாடி சென்ற சமூக விரோதிகள். நடவடிக்கை எடுக்க கேட்டு களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியை சேர்ந்த பாபு சுலோச்சனன். இவர் தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் காவலர். தனது பணி ஓய்வுக்கு பிறகு விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் அவரின் தோட்டத்தில் புகுந்த சில சமூக விரோதிகள் மது போதையில் தென்னை மரங்களில் ஏறி இளநீர் குலைகளை அடர்த்தி குடித்தும் வாழை மரங்களை வெட்டி சாய்த்து சூறையாடி அதன் பிறகு பத்துக்கும் மேற்பட்ட இளநீர் குலைகளை திருடி சென்றனர். தோட்டத்தில் சென்ற விவசாயி பாபு சுலோச்சனன் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் தனது விவசாய நிலத்தில் புகுந்து சூறையாடி இளநீர் குலைகளை அடர்த்தி திருடி சென்ற சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



