விழுப்புரம், ஜூலை 01 –
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடும் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் வழங்கினார்.
இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சிவசங்கரி மற்றும் பலர் உடனிருந்தனர்.