விழுப்புரம், ஆகஸ்ட் 28 –
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கள ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அவசரகால சிகிச்சைப் பிரிவு, புறநோயாளி பகுதி, உள்நோயாளர் பகுதி, மகப்பேறு சிகிச்சைப் பகுதி, Ultra Sonogram பிரிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட வார்டு, இரத்த சுத்திகரிப்பு பிரிவு, சமையலறை பிரிவு, துணி வெளுக்கும் இடம், மாவட்ட சித்த மருத்துவப்பிரிவு, மாவட்ட காசநோய் பிரிவு, மாவட்ட தொழுநோய் மையம் மற்றும் அடையாறு புற்றுநோய் ஆரம்ப நிலை நோய் கண்டறியும் மையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் உள்நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள், தூய்மையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மருத்துவமனைக்கு புதிய சுற்றுச்சுவர் ஏற்படுத்துதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் காலியாக உள்ள இடங்களில் வனத்துறை மூலமாக மரங்கள் வளர்ப்புத் திட்டம் போன்றவை ஏற்படுத்தவும், மருத்துவமனை வளாகத்தினை தூய்மையான முறையில் வைத்திருக்கவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது மரு. டலதா, இணை இயக்குநர் நலப்பணிகள் (முக பொ), விழுப்புரம், மரு.த. உமாராணி, முதன்மை குடிமை மருத்துவ அலுவலர் (பொ), மரு.கு. ரகுநாத், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (NHM), மரு.S. சுடர்மதி, முதன்மை குடிமை மருத்துவர் (பல்), மரு.இரா. சுதாகர், துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசநோய்), மரு. சுதாகர், துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (தொழுநோய்), மரு.பெ. கருணாமூர்த்தி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், திரு.ர. சீனிவாசன், இளநிலை நிர்வாக அலுவலர் மற்றும் திருமதி.வி. இந்திரா, செவிலிய கண்காணிப்பாளர் நிலை – II ஆகியோர் உடனிருந்தனர்.



