விளாத்திகுளம், செப்டம்பர் 23 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மேற்கு, கிழக்கு ஒன்றியம், நகரம் சார்பில் பூத் பாகம் வார்டு கழக நிர்வாகிகள் ஆன்லைனில் நிர்வாகிகள் நேரில் ஒருங்கிணைந்து பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சியை கோவில்பட்டி எம்.எல்.ஏ கடம்பூர் ராஜு தொடங்கி வைத்து விளக்க உரையாற்றினார் .
இந்நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ கள் சின்னப்பன், மோகன், அதிமுக முன்னாள் சேர்மன்கள் தனஞ்செயன், முனிய சக்தி ராமச்சந்திரன், வரதராஜ பெருமாள், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், பால்ராஜ், தனவதி, அதிமுக நகர செயலாளர்கள் மாரிமுத்து, ஆன்டி, மகளிர் அணி சாந்தி, வார்டு கவுன்சிலர் பிரியா, அதிமுக தகவல் தொழில்நுட்பம் சுரேஷ், ஆனந்த், மோகன், தங்கராஜ் உட்பட அதிமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



