By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும்
ஈரோடுதமிழ்நாடு

விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும்

Last updated: September 2, 2026 1:00 pm
September 2, 2026
3 Views
Share
SHARE

ஈரோடு, செப்.02.

ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தமிழகத்தில் விசைத்தறி தொழிலை பாதுகாக்கவும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 1.68 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்கி வருவதுடன், இதனை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 20 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் கைத்தறித்துறை மானியக் கோரிக்கை நடைபெற்றபோது, டேரிப் 3 ஏ 2 பிரிவின் கீழ் இயங்கும் விசைத்தறிக்கூடங்களுக்கு வழங்கப்படும் 1,000 அலகு இலவச மின்சாரத்தை 1,500 அலகாக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகும் என விசைத்தறியாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாததால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலவச வேட்டி–சேலை திட்டத்திற்காக புதிய வடிவமைப்புகளில் ஆடைகளை உற்பத்தி செய்வதால் ஒரு விசைத்தறிக்கு ரூ.5,000 வரை கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. வேட்டி உற்பத்தி அளவு 3.75 மீட்டரில் இருந்து 2 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி நடைமுறையில் கூடுதல் சிரமங்கள் ஏற்படுவதுடன், உற்பத்தியும் பாதிக்கப்படுவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜரிகை பார்டருடன் கூடிய சேலைகள் உற்பத்தி செய்யப்படுவதால், வேட்டி மற்றும் சேலை உற்பத்திக்கான கூலியை உயர்த்தி வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கூலி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நெசவாளர்களுக்கு மீண்டும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தொழிலும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எனவே, ஆட்சிப் பொறுப்பேற்றதும் 1,000 அலகு இலவச மின்சாரத்தை 1,500 அலகாக உயர்த்துவோம் என அளித்த தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், இலவச வேட்டி–சேலை திட்டத்திற்கான உற்பத்திக் கூலியை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. விசைத்தறி தொழிலை பாதுகாப்பதன் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

எந்த திட்டமும் வளர்ச்சி திட்டங்களாக கூறப்பட்டாலும் அது மக்களை சென்றடையாமலும் பயன்பாட்டில் இல்லாமலும் இன்றளவும் உள்ளது: அப்துல் கலாம் வழியில் உடுமலை பேட்டை சட்டமன்ற சுயேட்சை வேட்பாளர் நூதன பிரச்சாரம்
ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி: புதிய மாணவியர் வரவேற்பு விழா
700 பேர் கலந்து கொண்டகராத்தே போட்டி
தஞ்சாவூர் மாவட்டத்தில் விடுதிகளில் சேர மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
குமரி எஸ்பி யின் உத்தரவை மீறி நோ பார்க்கிங் பகுதியில் வாகன நிறுத்தம்; அனுமதிக்கும் போக்குவரத்து போலீசார்; பரபரப்பு குற்றச்சாட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

தானியங்கி வெளிப்புற இதய மீட்பு கருவி

March 21, 2025
76 Views
விளாத்திகுளம் அருகே முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள்
பெண்களை அவதூறாக வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு
அமைச்சர் சேகர் பாபுMLA அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
95 லட்சம் மதிப்பீட்டில் விதை சேமிப்பு சுத்திகரிப்பு நிலையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account