தஞ்சாவூர், ஜூன் 16 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 56 விடுதிகளில் சேர மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம். பள்ளி விடுதிக்கு வருகின்ற 18ஆம் தேதியும், கல்லூரி விடுதிக்கு ஜூலை 15ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல மாணவர் மாணவிகளுக்கு மொத்தம் 56 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு 24 விடுதிகள், பள்ளி மாணவிகளுக்கு 10 விடுதிகள், கல்லூரி மாணவர்களுக்கு 9 விடுதிகள், கல்லூரி மாணவிகளுக்கு 13 விடுதிகள் செயல்படுகின்றன.
பள்ளி விடுதியில் 4ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ மாணவி களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ மாணவிகள் சேர தகுதி உடையவர்கள் ஆவர். இதில் சேர பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தி லிருந்து பயிலும் கல்வி நிலையத் தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீ க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது.
தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது காப்பாளினியிடம் இருந்தோ அல்லது கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்று ம் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிக்கு வருகின்ற 18ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிககுள்ளும் ஜூலை 15ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் அல்லது காப்பிளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



