சென்னை, ஜூன் 9 –
ஆசியாவின் மிகப்பெரிய லக்கேஜ் பை உற்பத்தியாளர்களில் முதன்மை பிராண்டாக விளங்கும் விஐபி இண்டஸ்ட்ரீஸ் நவீன இந்தியப் பயணிகளின் மாறிவரும் தேவைகளுக்கு தக்க வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மூன்று தனித்துவமான பயணப் பை தொகுப்பான தனது ‘டிராவல் விஐபி’ எனும் புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்துகிறது.
பயணங்கள் ஒரு நவீன கால வாழ்க்கை முறையாகவும், பயண லக்கேஜ் பைகள் அதன் ஒரு அடையாளமாகவும் மாற்றம் காணுவதற்கு வெகு நீண்ட காலத்திற்கு முன்பே, விஐபி தனது இருப்பை இந்தத் துறையில் வேரூன்றி நிலை நாட்டியிருந்தது. மேலும் பயணத்தின் போது நீங்கள் எடுத்துச் செல்லும் பொருட்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதோடு மட்டுமல்லாமல் அதற்கான ஒரு சரியான பயணப் பை என்பது ஒதுக்கித் தள்ளவோ அல்லது பின் யோசனை அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டிய ஒன்றோ இல்லை என்பதை நிலை நிறுத்தி மாறாக அது ஒரு சிறந்த பயணத்தின் தொடக்கம் என்ற கருத்தியலை இந்தியாவிற்கு முதல் முதலாக அறிமுகப்படுத்திய பிராண்ட் ஆகும்.
தற்போது அறிமுகப்படுத்தப்படும் நவீன பயண அனுபவங்களை மையமாக நிலை நாட்டும் வகையில் விஜபி கிளாசிக், விஐபி ஃபிளெக்ஸ் மற்றும் விஐபி பாட் போன்ற தயாரிப்புக்கள் இந்தத் தொகுப்பில், அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தியர்கள் தங்கள் பயணங்களை உண்மையில் எவ்வாறு மேற்கொள்கிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட டிராவல் விஐபி (Travel VIP) பிரச்சாரம் என்பது இதுவரையில் இல்லாத வகையில் நுகர்வோரின் ஆழ்ந்த புரிதலில் இருந்து உருவான ஒரு தொகுப்பின் முழுமையான வெளிப்பாடாகும்.



