போகலூர், ஜுன் 23 –
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வாலாந்தரவை ஊராட்சி வாலாந்தரவை ( அம்மன்கோவில், அண்ணாநகர், தேவர் நகர்) கிராமங்களின் நீண்டநாள் கோரிக்கையான புதிய வழியில் மின்மாற்றி ஏற்படுத்தி சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் திறந்து வைத்தார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வாலாந்தரவை ஊராட்சியில் மண்டபம் மேற்கு ஒன்றியம் செயலாளர் கே.ஜே.பிரவீன் ஏற்பாட்டில் நீண்ட கால கோரிக்கை ஆன புதிய வழித்தடத்தில் மின்மாற்றி மூலம் மின்சாரத்தை சீரிய வழியில் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்த சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா அவர்களுக்கு கிராமமே நன்றி கூறியது. புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். இதற்கு முழு முயற்சி செய்த இராமநாதபுரம் மாவட்டக் கழக செயலாளர், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களுக்கு மக்கள் மனம் நிறைந்த நன்றி தெரிவித்தனர். இதற்கு முழு முயற்சி செய்து உரிய நடவடிக்கை எடுத்த மண்டபம் மேற்கு ஒன்றியம் செயலாளர் கே.ஜே.பிரவினுக்கு மக்கள் நெஞ்சார்ந்த நன்றி கூறி வாழ்த்துக்கள் கூறினர்.