திருப்பத்தூர், செப். 3 –
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 1200 வாக்குச்சாவடிகளுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களைப் பிரித்தல் குறித்த ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்திரவல்லி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) பூஷண குமார், திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முருகன், வட்டாட்சியர் (தேர்தல்) ததிருமலை மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.



