தஞ்சாவூர், செப்டம்பர் 5 –
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வருமான வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து வருமான வரி செலுத்த வேண்டும் என மதுரை வருமான வரி முதன்மை ஆணையர் வசந்த் பேசினார். தஞ்சாவூர் மாவட்டத்தில் வருமான வரி துறையின் சார்பில் வருமான வரி செலுத்துவோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. மதுரை வருமான வரி முதன்மை ஆணையர் வசந்தன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மதுரை வருமான வரி முதன்மை ஆணையர் வசந்தன் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-23 நிதியாண்டில் தனிநபர் வருமானம் ரூபாய் 2 இலட்சத்து 4490 ஆகும். தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த அனைத்து வருமான வரி செலுத்து வோர் தங்கள் வருமான வரியை தாமாக முன்வந்து செலுத்த வேண்டும். வருமான வரி படிவம் தாக்கல் செய்யும்போது உரிய ஆதாரங் களுடன் கூடிய வரி விலக்குகளை மட்டுமே கூறி திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தஞ்சாவூர் வருமான வரி கூடுதல் ஆணையர் ராஜராஜேஸ்வரி ஊதியம் பெறுபவர்கள் தொடர்பான வருமான வரி சட்ட விவரங்கள், வருமான வரி விலக்குகள், வரி செலுத்துவோர் நன்மைக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பேசினார்.
மேலும் மதுரை வருமான வரி கூடுதல் ஆணையர் ஸ்ரீதரன் வரி பிடித்தம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலக தியாகராஜன், தஞ்சாவூர் வருவாய் வரி துணை ஆணையர் வெங்கடேசன், வருமான வரி அதிகாரிகள் ஜான் ரஸ்ஸல், தங்கம் சாய்குமார் வில் விஜயன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



