ஊத்தங்கரை, மே. 12-
வருங்காலத்தில் அரசு மருத்துவராகி கிராமப்புற மக்களுக்கு சேவை செய்து தனது இலட்சியம்!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புதூர் புங்கனை ஊராட்சி புங்கனை கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் வைஜெயந்தி அவர்களின் மகள் பொற்கலை அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 469 மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார், மேலும் அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று ஊத்தங்கரை வட்டார அளவில் முதலிடத்தில் பெற்றுள்ளார், வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு அந்த கிராமத்தைச் சார்ந்த ஊர் பிரமுகர் ஜெயசூர்யா தலைமையில் இளைஞர்கள் சால்வு அளித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர், அரசு பள்ளியில் பள்ளியில் படித்து 469 மதிப்பெண் பெற்று இந்த மாணவி வருங்காலத்தில் அரசு மருத்துவராகி கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதை தனது நோக்கம் என கூறினார்.