கிருஷ்ணகிரி, ஆக 3 –
கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் உள்ள தனியார் விடுதியில் லஞ்ச ஊழல் ஒழிப்பு இயக்கம் சார்பாக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நிசார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு கட்ட பொறுப்பாளர்களை லஞ்சம் ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் தேசிய தலைவர் அலோக் ரவீந்தர் கடிதம் மற்றும் அடையாள அட்டை வழங்கி பொறுப்புகளை அறிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய தேசிய தலைவர், லஞ்சம் ஊழல் ஒழிப்பு இயக்கம் அகில இந்திய அளவில் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் நேர்மையான முறையில் பொதுமக்கள் அரசு நலத்திட்டங்களை பெற்றிடும் வகையில் லஞ்சம் தவிர்த்து இலவசமாக அரசு திட்டங்களை ஏழை எளிய மக்களுக்கு நேரடியாக சென்று சேரும் வகையில் எங்கள் இயக்கமானது கிராமங்கள் தோறும் பிரச்சார இயக்கங்களை மேற்கொள்ள உள்ளோம். லஞ்சம் ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் பொதுமக்களின் குறைகளை கேட்டு அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று லஞ்சம் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்வதை இலக்காக கொண்டு நாங்கள் நாடு முழுவதும் செயல்படுவோம்.
தவறு செய்யும் அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என செய்தியாளர்களிடம் பேசினார். இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் Dr. லட்சுமிபதி, ஜெயச்சந்திரன், செல்வம், முகமது முஸ்தாக், முகமது ஈசாக், மனோராஜ் விக்னேஷ் சகின் ஷா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.