திருப்பூர், ஜூலை 02 –
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் அவர்களது நினைவாற்றல் மற்றும் புதுவிதமான கேள்விகளுக்கு பதில் பெரும் வகையிலும் எளிய வகை ரோபோட் பொம்மையை திருப்பூரை சேர்ந்த பாரதி வித்யா பவன் பள்ளியில் அறிமுகம் செய்தனர். இந்த ரோபோட் மூலம் மாணவர்களின் பாடத்திட்டங்கள் மற்றும் பொது அறிவு தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் இணைய இணைப்பு மற்றும் கூகுள் இணைப்பு உள்ளதால் அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில்களை உடனடியாக பெற முடியும் எனவும் மாணவர்களின் கட்டளை திறன் மேம்படும் வகையில் ஒவ்வொரு வகுப்பறைக்கும் நாள்தோறும் இந்த ரோபோ பொம்மை மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும் இதன் மூலம் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள இலகுவாக அமையும் என பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.