குளச்சல், ஜூலை 14 –
ரீத்தாபுரத்தை சேர்ந்தவர் ரத்தினதாஸ் (65). கொத்தனார் வேலை பார்த்து வந்தவர் தற்போது வீட்டில் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜய்யன் என்பவரின் வீட்டு பின்புறத்தில் உள்ள பலா மரத்தில் பலாப்பழம் பறிக்க ரெத்தினதாஸ் மரத்தில் ஏறி உள்ளார். அப்போது அவர் எதிர்பாராமல் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை ரத்தின தாஸ் உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். மரத்தில் இருந்து பலியான தொழிலாளிக்கு ஜாய் அமலா என்ற மனைவியும், ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.