கோவை, ஆகஸ்ட் 03 –
ராயல் கேர் மருத்துவமனை சார்பில் அருள்மிகு ஸ்ரீ தையல்நாயகி உடமனர் ஸ்ரீ வைத்தியநாதசுவாமி அருளாசியுடன் திருவாசகம் முற்றோதல் பெருவிழா ராயல் கேர் மருத்துவமனைகளின் தலைவர் மருத்துவர் கே. மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கயிலை புனிதர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் முன்னிலை வகிக்க ராமானந்த குமரகுருபசாமிகள், காமாட்சிபுரம் ஆதீன பஞ்சலிங்கேஸ்வரர் சுவாமிகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
திருவாசகம் முற்றோதல் பெருவிழாவை சதாசிவ பரபிரம்ம சிவனடியார் கூட்டமைப்பு நிறுவனர் சிவ தாமோதரன் ஐயா மற்றும் ராஜம்மாள் சங்கரன் முற்றோதல் பெருவிழாவை நிகழ்த்தினார்கள். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவ பக்தர்கள் கலந்து கொண்டு திருவாசகத்தை பாடினார்கள். இந்நிகழ்விற்கு வருகை தந்த அனைவருக்கும் இலவச திருவாசகப் புத்தகம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.